கடையத்தில் புதர் செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

X
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் பகுதியில் இருந்து ரமணசமுத்திரம் செல்லும் வழியில் ரயில்வே கேட் அருகில் ஒரு வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதியில் தற்போது புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரெதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு வருகிறது. உடனே நெடுஞ்சாலை துறையினர் புதர் செடிகளை இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுதுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

