பொங்கலூர் தனியார் பள்ளி ஆண்டு விழா

பொங்கலூர் தனியார் பள்ளி ஆண்டு விழா
X
பொங்கலூர் ஆன்சியன்ட் மழலையர் பள்ளி ஆண்டு விழா
பொங்கலூர் வலசுப்பாளையம் சாலையில் ஆன்சியன்ட் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யின் 3-ம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சங்கீதா வரவேற்றார். இதில் ராமநாதபுரம் ராஜா கே.பி.எம். நாகேந்திர சேதுபதி கலந்து கொண்டு டிசைன் புக் ஆப் வேர்ல்டு உலக சாதனை புரிந்த 55 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் மில். ஆறுமுகம், ஆசிரியர் நாட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story