சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்னா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டி தலைமையாற்றினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ரூ.9,000 ஓய்வூதியம், ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்கல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கி சத்துணவு ஊழியர்களால் செயல்படுத்தவேண்டும் என கோரப்பட்டது. இப்போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஜெயபாரதி, இணைச் செயலாளர்கள் கோமதி, கலாராணி, முன்னாள் மாநில துணைத்தலைவர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் பா.லதா கோரிக்கைகளை விளக்கினார். தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்து மொழிந்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்ற, மாவட்ட பொருளாளர் கற்பகவள்ளி நன்றி கூறினார்.
Next Story

