சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
சிவகங்கை அரண்மனை வாசலில் வக்பு திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, ஆறுமுகம், சேதுராமன், மணியம்மா, அய்யபாண்டி, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இளையான்குடி, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். தர்னாவை முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் அப்பாஸ் நன்றி கூறி நிறைவு செய்தார்.
Next Story

