ராஜபாளையத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.*

ராஜபாளையத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.*
X
ராஜபாளையத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு விபத்தை தடுக்கும் நோக்கில் மீட்புக் குழுவினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில்வே பீடர் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் தீ விபத்து ஏற்படும் காரணங்கள், தீ விபத்தின் வகைகள், தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க பயன்படுத்தும் கருவிகள், பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள், காயம் அடைந்தவர்களை அழைத்து செல்லும் வழிகள் குறித்து தீ அணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வம் விளக்கம் அளித்தார். மேலும் முதலுதவி செய்தல், தீயை அணைக்கும் முறைகள், பாதிக்கப் பட்டவர்களை பத்திரமாக அழைத்து செல்லும் வழிகள் குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story