தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக வாழ்வூதியம் கோரி பேரணி - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு...*

X
விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக வாழ்வூதியம் கோரி பேரணி - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு... தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், திமுக அரசு 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, வருவாய்துறை, கிராம உதவியாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், சட்டபூர்வமான ஒய்வூதியத்தையும்வழங்கிட வேண்டும், தேர்தல் வாக்குறுதியின் படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், OHT ஆப்பரேட்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் புற ஆதார ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் ஆரம்பித்து நகராட்சி அலுவலகம், தெப்பம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில் வழியாக தேசபந்து மைதானம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் , நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பியவாறு இந்த பேரணியில் கலந்து கொண்டனர்
Next Story

