நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு சக்கத்தா மாரியம்மன் கோவிலில் வருடாந்திர தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது...

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு சக்கத்தா மாரியம்மன் கோவிலில் வருடாந்திர தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு சக்கத்தா கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஒரு வாரத்திற்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. திருவிழாவின் நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று அம்மன் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீற்றிருந்த சக்கத்தா மாரியம்மன் சக்கத்தா கிராமத்தில் இருந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர். திருத்தேரானது அரவேனு பஜார் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் வந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள சக்கத்தா கோவிலை வந்தடைந்தது.இவ்விழாவில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். பின்னர் அங்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பக்தர்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி திருவிழாவை சிறப்பித்து மகிழ்ந்தனர்.
Next Story