மருதுபாண்டியர் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் இரத்த தான முகாம்

X
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா. தங்கராஜ், கல்விசார் புலத்தலைவர் ல. மதுகிருத்திகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தஞ்சாவூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவர் ஜி.ஸ்ரீதர் முகாமை துவக்கி வைத்து பேசினார். தஞ்சை, இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தஞ்சாவூர் செயலாளர் விஸ்வநாத், நிர்வாகி கணபதி குமார், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளிடமிருந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் ரத்தத்தை தானமாகப் பெற்றனர் நிறைவாக, ரோட்ராக்ட் கிளப் மாணவி சிவசங்கரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் எல்.பிரின்ஸ், கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story

