சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும், இன்று நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும், இன்று நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது.
X
நெகிழிப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பான பயிலரங்கத்தினை சார் ஆட்சியர்சு.கோகுல் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற, வணிக உரிமையாளர்கள் மற்றும் குறு, சிறு நடுத்தர நிறுவன பிரதிநிதிகளுக்கான தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பான பயிலரங்கத்தினை சார் ஆட்சியர் சு.கோகுல் பாலக்கரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் உணவக கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும், இன்று நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது. இப்பயன்பாட்டினை பொதுமக்கள் முழுவதுமாக தவிர்த்திடும் பொருட்டு மஞ்சள் பை இயக்கம், மாற்றுப்பொருள் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துவதற்காக இன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் குறு,சிறு நடுத்தர நிறுவனங்களின் பிரிதிநிதிகளுக்கு பயிலரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கவும், கருத்துக்கள் வழங்கிடவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மற்றும் பணிகள் மேற்கொண்டு வரும் பேராசிரியர்கள் தெரிவிக்க உள்ளனர். அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பதற்கும், குறைப்பதற்கும் அனைவரும் முன்வர வேண்டும். . மேலும் வணிக உரிமையாளர்கள் மற்றும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் நெகிழி கழிவு மேலாண்மைக்கு உடன்பட வேண்டும். தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, சேமிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொட்களுக்கு மாற்றாக இயற்கையோடு இணைந்த பொருள்களான மூங்கில், பாக்கு மட்டை, வாழை, துணி பை, ஆகிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சில நெகிழிக் கழிவுப் பொருட்களை தனித்தனியாகப் பிரித்து அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் மேலும், இயற்கையான மூலப்பொருட்களாகக் கொண்டு நெகிழிக்கான மாற்று பொருட்கள் தயாரிப்பதில் வணிக உரிமையாளர்கள் மற்றும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டு நெகிழிப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். பயிலரங்கில் வணிக உரிமையாளர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவன பிரதிநிதிகள் என சுமார் 80க்கும் மேற்பட்ட நபர்கள்கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி எஸ்.விஜய பிரியா, உதவி பொறியாளர் செல்வி.மு.வாணிஸ்ரீ, திருச்சி அண்ணா பல்கலைக்கழக பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் முனைவர்.என்.ஸ்டாலின், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இணை பேராசிரியர் முனைவர்.ஏ.அசோக் குமார், திருச்சிராப்பள்ளி சுகாதாரம், நீர், சூழலியல், காற்று மற்றும் மறுசீரமைப்பு, உலகளாவிய சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தலைமை செயல் அதிகாரி முனைவர்.ஏ.அழகப்பா மோசஸ், திருவண்ணாமலை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு மைய தலைவர் முனைவர் எம்.பி.ராஜசேகரன் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story