முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

X
தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் ஏப்.18ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை பெறாதவர்களுக்கு, மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வார்டு வாரியாக வரும் 18ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 29,30,31ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் காப்பீடு அட்டை பதிவு செய்திட வரும் 18,19 ஆகிய இரு தினங்கள் பதிவு செய்யலாம். தொடர்ந்து 18,19,32 ஆகிய வார்டு பொதுமக்களுக்கு 21,22 ஆகிய தினங்களும், 15,16,17,33 ஆகிய வார்டு பொதுமக்களுக்கு 23,24 ஆகிய இரு தினங்களும், 12,13,20,21 ஆகிய வார்டு பொதுமக்களுக்கு 25,26 ஆகிய இரு தினங்களும், 35,36,44 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வரும் 28,29 ஆகிய இரு தினங்களும் நடைபெறுகிறது. பிற வார்டுகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story

