மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்

தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழுக்க போராட்டம்
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் முழுக்க போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ரா. ஜோதிபாசு வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து , சி. நாகராசன், வி. மாதன், எம். முத்து, சோ. அருச்சுனன்,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சீராஜூதின் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இஸ்லாமிய மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைபடுத்தகூடாது. வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
Next Story