கோவை: தனியார் பள்ளி விவகாரம் - மூவரை கைது செய்ய கோரிக்கை !

X
கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் பூப்படைந்த 8-ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் உட்பட மூவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புகார் அளித்ததால் தனக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சுரேந்திரநாத், கோவை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று மனு அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்தும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாததால் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்த அவர், பள்ளி தாளாளர் உள்ளிட்ட மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

