கோவை: இலவச வை-ஃபை வசதியுடன் காத்திருக்கும் அறை திறப்பு !

கோவை: இலவச வை-ஃபை வசதியுடன் காத்திருக்கும் அறை திறப்பு !
X
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால், அவர்களின் வசதிக்காக இலவச வை-ஃபை வசதியுடன் கூடிய காத்திருக்கும் அறை திறக்கப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால், அவர்களின் வசதிக்காக இலவச வை-ஃபை வசதியுடன் கூடிய காத்திருக்கும் அறை நேற்று திறக்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் மனு அளிக்க வருகின்றனர். இதனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவியது. இதனை கருத்தில் கொண்டு, மனுதாரர்களின் வசதிக்காக அலுவலக நுழைவு வாயிலில் புதிய காத்திருக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருக்கும் அறையில் குடிநீர் வசதி மற்றும் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் காவல் ஆணையர் சரவணசுந்தர் கலந்து கொண்டு புதிய காத்திருக்கும் அறையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய காத்திருக்கும் அறையில் ஒரே நேரத்தில் 30 பேர் வரை அமர்ந்து காத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியால் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story