சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் மூதாட்டி பலி

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி வள்ளி (65). இவா் சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையில் நேற்று மாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திருநெல்வேலியை சோ்ந்த பண்டாரம் மகன் நாராயணன் (50) என்பவா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ வள்ளி மீது மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இவ்விபத்து குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story

