தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி: நெடுவயல் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

X
மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற நெடுவயல் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவா்களை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் பாராட்டினாா். இப்பள்ளி மாணவா்கள் கெளதம், பரத்கனிஷ்கன், பாலமுகனா, இசாராகிணி, பாலசிவானி, காவியா, விக்னேஷ் ,கெளசிக், உமனேஷ், இஷாந்த், வைஷ்ணவி,மருதுபிரியன், சத்யா, சஞ்சனா, சுபாஷ்மணி, கதிா் ஆகிய 16 மாணவா்கள் தேசியத் திறனய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். அதில், மாணவா் கெளதம் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 15 வது இடமும் பெற்றாா். தோ்வில் வென்ற மாணவா்களை தென்காசி ஆட்சியா் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். மேலும் தலைமையாசிரியா் சுதாநந்தினி, பயிற்சி அளித்த ஆசிரியா்கள் லதா ,சாந்தி, பிரபாகரன் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் கண்ணன், கடையநல்லூா் வட்டாரக்கல்வி அலுவலா்கள் மகேஸ்வரி, முத்துலிங்கம், பள்ளி தாளாளா் கணேஷ்ரோம் செயலா் தம்புசாமி, பள்ளிக்குழு உறுப்பினா் மணிகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினர்.
Next Story

