அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
அரியலூர்,ஏப்.18- அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்து அரியலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் நேரு ஆரம்பித்த நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை சட்டத்துக்கு புறம்பாக அபகரிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, எதிர் கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தியாகராஜன், நகரத் தலைவர் மு.சிவக்குமார், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன்,மகிளா காங்கிரஸ் நிர்வாகி சகுந்தலா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Next Story

