மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி மகேஸ்வரி (42). சக்திவேலுக்கும், அவரது உடன் பிறந்த சகோதரருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்து பிரச்சினை தொடர்பாக கணவன்- மனைவி இடையே பிரச்சனை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் கயிற்றில் தூக்கிட்டு மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இதுதகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

