மது பாட்டிலால் தலையில் அடித்து வாலிபர் படுகொலை.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையத்தை சேர்ந்த நாகராஜின் மகன் கோவிந்தராஜ் ( 29) என்பவர் பொள்ளாச்சியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் நேற்று (ஏப்.17) மாலை எம்.ஜி.ஆர்.ஊரணி பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து' மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் கோவிந்தராஜ் தலையில் மது பாட்டிலால் தாக்கியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானார். இதனால் மது அருந்திய நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை அறிந்த போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

