சேலம் கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்:

சேலம் கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்:
X
பக்தர்களுக்கு வழங்க லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதைமுன்னிட்டு 40 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் தீவிரமாக நடந்து வருகின்றன. யாகசாலையில் இருந்து கோபுரத்தின் மேல் பகுதியில் கலசங்கள் வைக்கவும், புனிதநீர் எடுத்து செல்ல வசதியாகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் அன்னதானத்துடன் 40 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு வழங்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. லட்டு தயாரிப்பு பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் உதவி கலெக்டர் அபிநயா, போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கோவிலில் ஆய்வு செய்தனர்.
Next Story