அலங்கார வளைவு - இந்து தமிழா் கட்சி எதிா்ப்பு

அலங்கார வளைவு - இந்து தமிழா் கட்சி எதிா்ப்பு
X
மாநகராட்சி நிதியில் அலங்கார வளைவு: இந்து தமிழா் கட்சி எதிா்ப்பு தக்க
கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்துக்கு அலங்கார வளைவு அமைக்க, திண்டுக்கல் மாநகராட்சி நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்கு, இந்து தமிழா் கட்சி எதிா்ப்புத் தெரிவித்தது. இதுதொடா்பாக இந்து தமிழா் கட்சியின் நிறுவனத் தலைவா் ராம.ரவிக்குமாா் வெளியிட்ட அறிக்கை: திண்டுக்கல் மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முத்தழகுப்பட்டியில் உள்ள தேவாலயத்துக்கு, பழனி சாலை, முத்தழகுப்பட்டி பிரதான சாலை சந்திப்பில் 'அலங்கார நுழைவாயில்' அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. வாக்கு வங்கி நாடக அரசியலுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநகராட்சி நிா்வாகம் இதுவரை இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். வரி செலுத்தும் மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், அந்த வரிப் பணத்திலிருந்து ரூ.10 லட்சத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி நிா்வாகம் இந்தத் தீா்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவுப் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
Next Story