விழுப்புரத்தில் பிரதான சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

X
விழுப்புரம் நேருஜி சாலை வழியாக, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து வீரவாழியம்மன் கோவில் வரை சாலையின் இருபுறங்களில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.இதனால், வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதை டிராபிக் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story

