ஒசூர் மின்வாரியத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒசூர் மின்வாரியத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
ஒசூர் மின்வாரியத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி தலைமையில் மின்வாரியத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது விவசாயிகள் தமிழக அரசை கண்டித்தும் மின்வாரியத்தை கண்டித்தும் உடலில் பட்டை நாமம் போட்டு சாவு மணி அடித்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மின்வாரிய அலுவலகங்களில் மின் இணைப்புக்காக சாதாரண முறையில் 10 ஆயிரம் 25 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டி காத்திருக்கின்றனர். 6 லட்சம் விவசாயிகளை இந்த அரசு காத்திருக்க வைத்துள்ளது. ஓசூர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு தயார் நிலை விண்ணப்பம் வழங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று ஆர்பாட்டம் நடத்தினர்.
Next Story