சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி!

X
மீன்வளக்கல்லூரி மற்றும ஆராய்ச்சி; நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மீன்வளக்கல்லூரி மற்றும ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, தருவைக்குளம், தூத்துக்குடியில் வருகின்ற 24.04.2025 அன்று "சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம” குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் தொழில்நுட்பம் குறித்த வகுப்பு மற்றும் செயல்சார் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300ஃ- செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5.00 மணிக்குள் தங்களது பெயரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்;. பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி - 628 008 தொலைபேசி எண்: 0461-2277424, அலைபேசி எண்: 9994450248
Next Story

