அரசு பள்ளி பணிக்காக சிமென்ட் வாங்கிய மாணவர்கள்

அரசு பள்ளி பணிக்காக சிமென்ட் வாங்கிய மாணவர்கள்
X
கொடைக்கானலில் அரசு பள்ளி கட்டட பணிக்காக சிமென்ட் வாங்கிய மாணவர்கள் - பொதுமக்களிடையே அதிருப்தி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டி அரசு உயர்நிலை பள்ளி கொடி கம்பம் , சேதமடைந்த தளத்தை சீரமைப்பு செய்ய கட்டுமான பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக சிமெண்ட் மூடை வாங்க 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் டூவிலரில் அனுப்பி வைக்கப்பட்டனர். கடையில் சிமென்ட் மூடை வாங்கி பள்ளிக்கு கொண்டு சென்றனர். பள்ளி மாணவர்களை படிப்பை தவிர்த்து பிற பணிகளுக்கு ஈடுபடுத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்தும் கட்டுமான பணிக்காக ஈடுபடுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டூவீலரை உரிமம் இல்லாமல் மாணவர்கள் இயக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி தலைமையாசிரியர் வாசிமலை கூறுகையில்,''பள்ளியில் கட்டுமான சீரமைப்பு பணி நடக்கிறது. மாணவர்கள் சிமெண்ட் மூடையை துாக்கி மட்டும்தான் விட்டனர். கொண்டு வரவில்லை'' என்றார்.
Next Story