கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தி வீலரை களவாடிய வாலிபர் கைது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தி வீலரை களவாடிய வாலிபர் கைது. கரூர் மாவட்டம், ராயனூர், அன்பு நகர், பஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் வயது 25. இவர் ஏப்ரல் 12ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், சிகிச்சை பெற்று வரும் அவரது நண்பரை சந்திக்க கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது டூவீலரில் சென்று உள்ளார். மருத்துவமனை முன்பு தனது டூவீலரை நிறுத்தி விட்டு, மருத்துவமனைக்கு சென்று நண்பனுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு மீண்டும் இரவு எட்டு மணி அளவில் தனது டூவீலரில் எடுக்க வந்துள்ளார். அப்போது தான் நிறுத்திய இடத்தில் டூவீலர் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாகனங்கள் நிறுத்தும் வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தும் தனது டூவீலரை காணாததால், தனது டூவீலரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது வாகனம் ரூபாய் 50,000 மதிப்புள்ளது என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது, கரூர், வேலுச்சாமிபுரம் அருகே உள்ள கோதூர் பிரிவு 3-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஜீவா வயது 29 என்பவர் அந்த டூவீலரை களவாடியது தெரியவந்தது. உடனடியாக ஜீவாவை கைது செய்த காவல்துறையினர், களவாடிய ரூ.50,000- மதிப்புள்ள டூவீலரை மீட்டனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஜீவாவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story




