இடப் பிரச்சனையில் தள்ளி விட்டு முதியவர் இறந்தார்

இடப் பிரச்சனையில் தள்ளி விட்டு முதியவர் இறந்தார்
X
அண்ணன், தம்பி கைது
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் பாஸ்கரன் (68). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மகன் கணேசன் (34), இவரது சகோதரர் கார்த்திக் (40) ஆகிய இருவருக்கும், பாஸ்கனுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் பாஸ்கரன் பக்கம் தீர்ப்பாகியுள்ளது. இது தொடர்பாக, நாகை மாவட்ட குற்றப்பிரிவில் கணேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில், புகாரின் மீதான விசாரணை கடந்த 16-ம் தேதி வந்தது. போலீசார் இருதரப்பினரையும் ஆஜராகும்படி தகவல் தெரிவித்தனர். ஆனால், பாஸ்கரன் உடல்நிலை சரியில்லாததால், வழக்கறிஞர் மூலமாக 10 நாட்களுக்கு பிறகு வருவதாக மனு அனுப்பினார். இதனால், ஆத்திரம் அடைந்த கணேசன் மற்றும் கார்த்திக் இருவரும், நாங்கள் மட்டும் விசாரணைக்கு அலைகிறோம். நீ வர மாட்டியா என்று பாஸ்கரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்தனர். சத்தம் கேட்டு வந்த பாஸ்கரனை, கணேசன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கீழே தள்ளி விட்டதில், கீழே விழுந்த பாஸ்கரன் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சன்னாநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பாஸ்கரனை பரிசோதனை செய்த டாக்டர், பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்த, திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story