லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய ஊழியர் பணியிட நீக்கம்

லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய ஊழியர் பணியிட நீக்கம்
X
தாளவாடி பகுதியில் மின் விநியோகத்திற்கு லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் பணியிடை நீக்கம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் பாரதிபுரம் பகுதியில் விவசாயி செந்தில் என்பவர் தனது தோட்டத்தில் கடந்த 15 நாட்களாக மின்சாரம் இல்லை என மின்வாரியத்திடம் புகார் அளித்திருந்தார். ஆனால் தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் அந்த விவசாயி தவித்து வந்தார். இந்நிலையில் மின்தடையை நீக்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் மணிகண்டன் என்பவர் அந்த விவசாயி இடம் பணம் கேட்டுள்ளார். அதன்படி விவசாயி செந்தில் மின்தடையை நீக்க மின்வாரிய ஊழியர் மணிகண்டன் இடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பணம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய மின்வாரிய ஊழியர் அதை தனது சட்ட பையில் வைக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தையும் விவசாயி தனது செல்போனில் அந்த நபருக்கு தெரியாமல் ரகசியமாக படம் எடுத்திருந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதை எடுத்து சம்பந்தப்பட்ட மின் ஊழியர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது
Next Story