வெங்கமேடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கஞ்சா பறிமுதல்.

வெங்கமேடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கஞ்சா பறிமுதல்.
வெங்கமேடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கஞ்சா பறிமுதல். கரூர் மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில் குமாருக்கு வெங்கமேடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில், வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்பகுதியில் உள்ள தனியார் தியேட்டர் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பதிக்க வைத்திருந்த ரூ 1000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, வெங்கமேடு டைலர் ராதா தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் தினேஷ்குமார் என்கிற தில் தினேஷ் வயது 26 என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறிந்து தில் தினேஷை கைது செய்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர்.
Next Story