பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனமான வாய்க்கால் பாசனத்துக்கு மார்ச் 2-ந் தேதியில் இருந்து 100 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மொத்தம் 100 நாட்களுக்கு 97 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்து இருந்தனர். மூன்று வாய்க்கால்களில் முறையே 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்கப்பட்டு அப்பகுதியில் தலா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரப்பளவிலான பாசன நிலம் நேரடியாகவும், மறைமுறையாகவும், பயன்பெற்றன. கடந்த 10 நாட்களாக அந்தியூர் சுற்றுவட்டார் பகுதியிலும் வரட்டு பள்ளம் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. பரவலாக வரட்டு பள்ளம் அணை பாசனப்பகுதியில் சராசரியாக 20 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிந்துள்ளது. இதன் காரணமாக ஒரு வாரத்திற்கு முன் பாசனத்துக்கு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கூறுகையில், கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. பாசனத்திற்காக தண்ணீர் தேவைப்படாது என்பதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கூறினால் தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.
Next Story

