வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது

வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
X
பவானி அருகே வீடு புகுந்து 12 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது சி.சி.டி.வி கேமரா மூலம் சிக்கினார்
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தை சேர்ந்தவர் ஜமுனா ராணி (63). இவர் அதே பகுதியில் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். நேற்று காலை இவர் தன்னுடைய வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்க சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதிலிருந்த 12.5 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.போலீசார் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (36) என்பவர் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12.5 பவுன் தங்க நகை, ரூ.18 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சசிகுமார் இதேபோன்று வேறு வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story