மேற்கூரை விழுந்தது ஒருவர் பலி

மேற்கூரை விழுந்தது ஒருவர் பலி
X
அரச்சலூர் அருகே சர்க்கரை ஆலையின் மேற்கூரை விழுந்ததில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடபழனியைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர் அதே பகுதியில் உள்ள விஸ்வநாதன் என்பவரது சர்க்கரை ஆலையில் கூலி செய்து வருகிறார். கடந்த 14-ம் தேதி பெய்த கனமழையால், சர்க்கரை ஆலையின் மேற்கூரையின் சிமெண்ட் சீட் சேதமடைந்தது. அதனை சரி செய்வதற்காக கடந்த 15-ம் தேதி காலையில், கிரேன் வண்டியின் மூலம், பழனிசாமியும், வடமாநிலத்தைச் சேர்ந்த கோபால் என்பவரும், மேற்கூரையின் மீது ஏறியுள்ளனர். அப்போது, சிமெண்ட் சீட் உடைந்து விழுந்ததில், அவர்கள் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள், பழனிசாமி மற்றும் கோபாலை உடனடியாக மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவம்மனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பழனிசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதுகுறித்து, பழனிசாமியின் மனைவி நித்யா அளித்த புகாரின் பேரில், அரச்சலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story