அரவக்குறிச்சி- தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மதுவுக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

அரவக்குறிச்சி- தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மதுவுக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
அரவக்குறிச்சி- தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மதுவுக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,மூலப்பட்டி அருகே உள்ள வடுக நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் வயது 41. விவசாயி. அதே சமயம் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இலையில் நிதி நிறுவனத்தில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விரக்தி அடைந்த சதீஷ் மது போதைக்கு அடிமையானர். இதனால் அவரது மனைவி ஜெயந்தி வயது 36 என்பவரை பிரிந்து கடந்த ஒரு வருட காலமாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 8 மணி அளவில், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள கலைமகள் சபா கார்டன் பகுதியில் சுய நினைவின்றி கிடந்தவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சதீஷின் மனைவி ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சதீஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மதுவுக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,மூலப்பட்டி அருகே உள்ள வடுக நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் வயது 41. விவசாயி. அதே சமயம் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இலையில் நிதி நிறுவனத்தில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விரக்தி அடைந்த சதீஷ் மது போதைக்கு அடிமையானர். இதனால் அவரது மனைவி ஜெயந்தி வயது 36 என்பவரை பிரிந்து கடந்த ஒரு வருட காலமாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 8 மணி அளவில், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள கலைமகள் சபா கார்டன் பகுதியில் சுய நினைவின்றி கிடந்தவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சதீஷின் மனைவி ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சதீஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story