டாஸ்மாக் கடையில் கேட்ட சரக்கை கொடுப்பதில்லை என புகார்.

X
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கீழப்பட்டி செல்லும் சாலையில் மலையூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது .இந்த கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை தனியாருக்கு மொத்தமாக விற்பதாகவும் மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்கள் இருந்தாலும் அதை தர மறுப்பதாகவும் விற்பனையாளர் பவுன் என்பவர் மீது தொடர் புகார்கள் இருந்த நிலையில் நேற்று (ஏப்.17)இரவு விக்கிரமங்கலத்தை சேர்ந்த மோகன் என்பவர் மது வாங்குவதற்கு அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார் .அங்கு சென்று, தான் விரும்பி அருந்தும் மதுபானத்தை விற்பனையாளரிடம் கேட்க, அந்த மதுபானம் கடையில் இருந்தும் அதை தர மறுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் டாஸ்மாக் முன்பு காக்க வைத்துள்ளார். மேலும் அதே மதுபானத்தை விற்பனையாளருக்கு வேண்டியவர்கள் வந்து கேட்ட போது கொடுத்துள்ளார். இதனை தட்டி கேட்ட வாடிக்கையாளர் மோகன் என்பவரை தரக்குறைவாக பேசியதுடன் அவரை தாக்க விற்பனையாளர் பவுன் முற்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாக கூறியுள்ளார்.
Next Story

