காங்கேயத்தில் பைக் திருடிய இளைஞர் கைது நாலு இருசக்கர வாகனம் பறிமுதல்

காங்கேயத்தில் பைக் திருடிய இளைஞர் கைது நாலு இருசக்கர வாகனம் பறிமுதல்
X
காங்கேயத்தில் சோதனை ஓட்டம் பார்க்கிறேன் என்று பைக் திருட்டு 4 நாட்களில் இளைஞர் கைது - விலையுயர்ந்த 4 பைக் பறிமுதல் 
திருப்பூர் மாவட்டம் கோவில்வழியை சேர்ந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பைக்கை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து பைக்கை காங்கேயத்தில் சோதனை ஓட்டம் ஓட்டி பார்க்கிறேன் என்று கூறிய திருட்டு இளைஞரிடம் ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை இழந்த நிலையில் காங்கேயம் காவல்துறையினர் 4 நாட்களில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்ததுடன் 5 பைக்கை மீட்டனர். திருப்பூர் -கோவில்வழி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த குமரேஷ், குண்டடம் பகுதியில் உள்ள தனியார் கிரஷரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது Yamaha R15 (TN31CD1296) வகை இருசக்கர வாகனத்தை விற்கும் நோக்கத்தில் முகநூலில் (Facebook) விளம்பரம் செய்திருந்தார். இதை பார்த்து, ஒருவர் வாகனத்தை வாங்க விருப்பம் உள்ளது கூறி, கடந்த 11.04.2025 குமரேஷை தொடர்பு கொண்டு வாகனத்தின் விவரங்களை கேட்டறிந்தார். நாளை காலை காங்கேயம் பேருந்து நிலையத்தில் சந்தித்து, சோதனை ஓட்டம் பார்த்த பிறகு வாகனத்தை வாங்குவதாக உறுதி அளித்தார். அதே போல் 12 ம் தேதி நம்பிக்கையுடன் குமரேஷ் தனது இருசக்கர வாகனத்தை காங்கேயம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்தார். அங்கு வந்த நபர் பேக்கரியில் குமரேஷுக்கு பழரசம் வாங்கி கொடுத்து, "வண்டியை சோதனை ஓட்டம் பார்த்துவிட்டு வருகிறேன் " என கூறி, வாகனத்தில் ஏறி வேகமாக சென்றுள்ளார். இதன் பிறகு, பல மணி நேரம் காத்திருந்தும் அந்த இளைஞர்  திரும்பவில்லை. மொபைல் எண்ணை அழைத்த போது, அது சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பைக் திருடப்பட்டுள்ளதாக உணர்ந்த குமரேஷ்,உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 3 மாதங்களுக்கு முன்னர் தான் இந்த பைக் வாங்கிய குமரேஷ் வேறு பைக் வாங்கலாம் என நினைத்து விற்பனைக்கு ஆன்லைனில் விளம்பரம் செய்து பைக் திருட பட்டத்தில்  அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த பைக்கின் விலை ரூ. 1,09,000 மதிப்புள்ள Yamaha R15 பைக் திருடப்பட்டது ஒரு பழரசத்தால் தனது இரு சக்கர வாகனத்தை இழந்தது குமரேசனுக்கு மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கின்றார். மேலும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காங்கேயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் அப்போது வந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான இளைஞர் புகைப்படத்துடன் வாகன சோதனையில் பிடிபட்ட இளைஞரின் உருவமும் ஒரே போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர் அப்போது காவல் துறையினருக்கு  அதிர்ச்சி தரும் வகையில் தான் தான் காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் வாகனத்தை சோதனை ஓட்டம் பார்க்கிறேன் என பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார். பைக் திருடிய சேட் @சிவா (வயது 26) வேப்பனம்பள்ளி   கிருஷ்ணகிரியை சேர்ந்தவன் என்பதும் தற்போது சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி ரோடு முழக்கடையில் வசித்துவருப்பதாகவும் தெரிவித்தான் . ஹோட்டலில் வேலை செய்துகொண்டு இது போல் பைக் விற்கப்படும் என பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வரும் விளம்பரங்களை நோட்டமிட்டு பின்னர் பைக் திருட்டில் ஈடுபட்டதை  ஒப்புக்கொண்டார். மேலும் திருடப்படும் வாகனங்களை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அடமானத்தில் வைத்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து மேலும் 4 விலையுயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்த காங்கேயம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை சிறையில் அடைத்தனர்.
Next Story