சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்
X
போராட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் வள்ளி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராஜ், முத்துலட்சுமி, சுதா, முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு காஞ்சனாமேரி வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ரவி, ஆனந்தகிருஷ்ணன் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் விஜயா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கால முறை ஊதியம் வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் சந்திராமேரி நன்றி கூறினார்.
Next Story