சங்கரன்கோவிலில் புதிய பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை இணைப்பு சாலையில் அமைந்துள்ள புதிய தற்காலிக பேருந்து நிலையத்தில் புதிய வழித்தட பேருந்துகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சங்கரன்கோவில் முதல் கலிங்கப்பட்டி, கடையநல்லூர் முதல் சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் முதல் தென்காசி, தென்காசி முதல் திருமலைக்கோயில், தென்காசி முதல் வீராணம், சங்கரன்கோவில் முதல் சிவகிரி பகுதிக்கு 3 பேருந்துகள் என மொத்தம் 8 மகளிர் விடியல் பயண பேருந்துகளின் புதிய வழித்தடத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார். சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story

