விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு : தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

X
தூத்துக்குடி அருகே உள்ள மேலத்தட்டப்பாறை கிராமம் ரயில் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மண் சுவர் வீட்டில் கடந்த 3 வாரமாக விஷ கடந்தை வண்டுகள் கூடு கட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த கூண்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருந்துள்ளது. இது குறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றனர் அங்கு தீயணைப்பு வீரர்கள் உடல் கவசம் உடைகள் அணிந்து தீ வைத்து விஷ வண்டுகளை அழித்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் விஷ வண்டுகள் அனைத்தும் இறந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு விஷ வண்டுகளை அழித்ததால் அந்தப் பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினார்கள். இதுகுறித்து தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் கூறும்போது இந்த வண்டுகள் அனைத்தும் விஷத்தன்மை உள்ளது. இந்த வண்டுகள் குறிப்பிட்ட இடங்களில் கூடுகட்டி முட்டைகள் இடும். தற்போது இங்கு இருந்த கூடுகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருந்தனர் இதை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு முழுமையாக அளித்தனர் என்று கூறினார்
Next Story

