தென்காசியில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏப்.25 முதல் மே 15 வரை 21 நாள்கள் கிரிக்கெட், தடகளம், கால்பந்து, கையுந்துபந்து, பளுதூக்குதல், வளைகோல்பந்து, அட்யா பட்யா மற்றும், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இம் முகாமில் 18 வயதிற்குள்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இக்கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம் 163அ, ரயில் நகா், மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி 04633 - 212580 / 86100 37399 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story

