சுரண்டை அரசு கல்லூரியில் தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கணேசன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) பாலச்சந்தா் முன்னிலை வகித்தாா். தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் ரவீந்திரன் தலைமையிலான வீரா்கள், தீ விபத்துகள் மற்றும் அதை தடுப்பதற்கான முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். இதில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
Next Story

