எம்ஜிஆர் நகரில் நடந்து சென்ற ஒரு மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
எம்ஜிஆர் நகரில் நடந்து சென்ற ஒரு மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புதுசத்திரம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 55. இவர் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 5:30 மணி அளவில், புதுச்சத்திரம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர்,நடந்து சென்ற அண்ணாதுரை மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அண்ணாதுரையை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர்.
Next Story




