கிருஷ்ணகிரி:மின்வேலியில் சிக்கி தபால் ஊழியர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பாலகுறி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி(20) இவர் கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில், தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள கங்கலேரி அருகே சென்றுள்ளார். அண்ணா நகர் பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகே வனவிலங்குகளை வருவதை தடுக்க போடபட்டிருந்த மின்வேலியில், திருப்பதியின் கை உரசியதில் உடலில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

