அய்யம்பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது.

அய்யம்பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது.
அய்யம்பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது. கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை நடப்பது குறித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி அளவில், கிழக்கு அய்யம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடப்பது கண்டறியப்பட்டு, விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிச்சமுத்துவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பாலவிடுதி காவல்துறையினர்.
Next Story