அரவக்குறிச்சியில் வக்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரவக்குறிச்சியில் வக்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காயல பாவா திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட தலைவர் முகமது சலீம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய முஸ்லிம் லீக் அணிகளின் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
Next Story




