குமரியில் விண்வெளி பூங்கா
இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- இஸ்ரோவில் 2025-ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்-1 நிலை நிறுத்தியிருக்கிறோம். அதில் இருந்து நிறைய சயிண்டிக்கல் டேட்டாக்கள் கிடைத்தன. கடந்த ஜனவரி 16-ல் ஸ்பீடேக்ஸ் எனும் இரண்டு செயற்கைக் கோளையும் இணைத்து சாதனை நடந்தது. மார்ச் 13-ம் தேதி மறுபடியும் செப்பரேட் பண்ணி சாதனை படைத்துளோம். இந்த சாதனை செய்ததில் இந்தியா 4-வது நாடு ஆகும். சர்க்கன் நேவிகேஷன் என்ற முறையில் ஒரு சேட்டிலைட் சுற்றிக்கொண்டிருக்கும், அதை மற்றொரு செயற்கைகோள் கண்காணித்துக்கொண்டிருக்கும். ஜனவரி 29-ம் தேதி 100-வது ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது. மேலும் 3-வது லாஞ்ச் பேட் ஸ்ரீஹரிகோட்டாவில் 42 மாதத்தில் அமைக்க 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் லிக்யூட் ராக்கெட் இன்ஜினில் பெரிய ஹெப்பாசிட் உள்ளது. விகாஷ் இன்ஜின். 80 டன் ட்ரஸ்ட் கொடுக்கும். இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் எடையுள்ள இன்ஜின் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் பி.எஸ்.எல்.வி 61வது ராக்கெட்டை அனுப்ப இருக்கிறோம். மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செய்த தொலை தொடர்பு செயற்கைகோளை மார்க் -3 மூலம் ஜூலை மாதம் விண்ணில் அனுப்ப உள்ளோம். கன்னியாகுமரி சன் செட் பாயின் அருகே ஸ்பேஸ் பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளனர். குலசேகரபட்டிணத்தில் 95 சதவிகிதம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு புறப்படும். என கூறினார்.
Next Story



