தாணுமாலய சுவாமி கோவில் கால் நாட்டு

தாணுமாலய சுவாமி கோவில் கால் நாட்டு
X
சுசீந்திரம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு சித்தரை தெப்பத் திருவிழாவிற்காக வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றுடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.      இதன் ஏற்பாடாக இன்று காலை தாணுமாய சுவாமி கோவில் முன்பகுதியில் கால் நாட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா துவங்குகின்றது. விழா நாட்களில் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாள் பெருமாள் ரத வீதியை சுற்றி வாகனப் பவனியும்  கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.       பத்தாம் திருவிழாவான தெப்பத் திருவிழா அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வைத்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வரும் சித்திரை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.       விழா ஏற்பாடுகளை கோவில் இணைஆனையர் பழனி குமார், அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அறங்காவல் குழு உறுப்பினர்கள், கோவில் மேலாளர்  ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் தாணுமாலயசுவாமி கோயில் பக்தர்கள் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Next Story