தாமரைக் குளம் பதி சித்திரைத் திருவிழா தொடங்கியது  

தாமரைக் குளம் பதி சித்திரைத் திருவிழா தொடங்கியது  
X
11 நாட்கள் நடக்கிறது
கன்னியாகுமரி அருகே தென் தாமரைகுளம், அய்யா வைகுண்ட சுவாமியின் ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானை அருளிய மூலப்பதியான  தாமரைகுளம் பதியில் சித்திரைத்திருவிழா இன்று 18-ம்தேதி  திருக்கொடியேற்றத்துடன் துவங்கி   28-ம் தேதி வரை 11-நாட்கள்  நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழாவான இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ,5 மணிக்கு உகப்பாட்டு,காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றுதல் நடைபெற்றது.  இரண்டாம் நாள் திருவிழாவான நாளை முதல் 10ஆம் நாள் திருவிழாவான 27-ம் தேதி வரை காலை மாலை இரவு அய்யாவுக்கு பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு இரவு வாகனப்பவனியும், அன்னதர்மமும் நடைபெறுகிறது. 11-ம் திருவிழாவான 28 ம்தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, காலை 6 மணிக்கு உகப்பாட்டு ,9.30 மணிக்கு திருத் தேரோட்டம், பகல் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து,மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,6.30 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல் ,இரவு 7.15 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல்,8 மணிக்குஅன்ன தர்மம் வழங்குதலும் நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை தக்கார்,  குருபரம்பரையினர், மற்றும் அய்யாவின் கொடிமக்கள் செய்துவருகின்றனர்.
Next Story