சிவகங்கை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சிவகங்கை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
X
சிவகங்கை அருகே மொலாசீஸ் ஏற்றி வந்தால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே செயல்பட்டுவரும் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மதுபான ஆலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட மொலாசீஸ் ஏற்றிய டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் இயக்கிய டேங்கர் லாரி, சோழபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், கிராம மக்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் டேங்கரில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் மொலாசீஸ் சாலையில் வெள்ளம்போல் ஓடி வீணாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக சிவகங்கை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Next Story