சிவகங்கையில் தந்தையை தாக்கிய மகன் கைது

சிவகங்கையில் தந்தையை தாக்கிய மகன் கைது
X
சிவகங்கையில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் மாரி (65). இவரது மனைவி மாரியம்மாள் (60). நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணிபுரிகிறார். இவர்களது மகன் அன்புச்செல்வன் (35), வேலைக்குச் செல்லாமல் பெற்றோருடன் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார். தனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லி தந்தை மாரியை ஓடுகளால் கடுமையாகத் தாக்கினார். படுகாயமடைந்த அவர் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து அன்புச்செல்வனை கைது செய்தனர்.
Next Story