போடியில் மனநலம் பாதித்தவர் தீக்குளித்து உயிரிழப்பு

போடியில் மனநலம் பாதித்தவர் தீக்குளித்து உயிரிழப்பு
X
வழக்குப்பதிவு
போடியை சேர்ந்தவர் கருப்பசாமி (29). இவர் கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதித்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்த கருப்பசாமி நேற்று முன் தினம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் நேற்று (ஏப்.17) வழக்கு பதிந்தனர்.
Next Story