உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய டிஎஸ்பி

X
சிவகங்கை ஆயுதப்படை துணைக்கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துவருபவர் கமலக்கண்ணன். இவர் மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு தனது வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். கண்டனி அருகே வனத்துறை அலுவலகப் பகுதியில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 60 வயது முதியவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த கமலக்கண்ணன், அவசர ஊர்திக்காக காத்திருக்காமல் முதியவரை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார். விபத்தில் சிக்கிய முதியவர் கல்லுப்பட்டியைச் சேர்ந்த சந்திரபாண்டி (60) என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய முதியவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றிய துணைக் கண்காணிப்பாளரை பொதுமக்களும், முதியவரின் உறவினர்களும் பாராட்டினர்.
Next Story

